earthquake

இந்தோனேசியாவிலுள்ள லம்போக் மற்றும் பாலி தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, தெற்கு கலிமண்டன், தென்கிழக்கு மடுரா, கிழக்கு ஜாவா ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. லாம்போக் நகரில் 80 சதவீத கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே போல் ஜிலி தீவிலும் பாதிப்பு அதிகமானது.

Advertisment

இந்நிலயில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 347ஆக உயர்ந்துள்ளது. 1400 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களுடைய குடியிருப்பை விட்டு வெளியேறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதே தீவில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.