indonesia ban palm oil exports

Advertisment

உள்நாட்டு பற்றாக்குறையைச் சமாளிக்க பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது.

உலக அளவில் பாமாயிலை அதிகம் உற்பத்திச் செய்யும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அழகு சாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக கச்சா பாமாயில் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், இந்தோனேசியா தற்போது பாமாயில் சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டைஎதிர்க்கொண்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக இந்தோனேசிய அதிபர் அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இருந்து கச்சா பாமாயிலை இந்தியாவும் இறக்குமதி செய்யும் நிலையில், இந்த தடையால் பாற்றாக்குறை மேலும் உயர வாய்ப்புள்ளது.