தாய்லாந்து நாட்டில் அந்நாட்டு பெண்களை போலி திருமணம் செய்த 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து கொண்டால் அந்நாட்டில் தங்குவதற்கான விசா எளிதாக கிடைக்கும் என்று இந்த போலி திருமணங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள சில பெண்கள் 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு இந்த போலி திருமணங்களுக்கு ஒப்புக்கொள்கின்றனர். திருமணம் பதிவு செய்யப்பட்டவுடன் அந்த சான்றிதழை வைத்து இந்தியர்கள் விசா பெற்றுவந்துள்ளனர். இதனை கண்டறிந்த போலீஸார் 10 இந்தியர்களையும், அவர்களுக்கு உதவிய 20 தாய்லாந்து பெண்களையும் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி சென்ற 26 இந்தியர்களை தேடி வருகின்றனர்.
10,000 ரூபாய் கொடுத்து தாய்லாந்து பெண்களுடன் திருமணம், பத்து இந்தியர்கள் கைது...
Advertisment
Advertisment