Advertisment

குகையில் சிக்கிய மாணவர்களை மீட்க உதவிய இந்தியர்கள்...

thai

தாய் கால்பந்தாட்ட சிறுவர்கள், தாம் லுஆங் என்ற மலைக்குகைக்குள் 18 நாட்கள்வரை சிக்கிக்கொண்டனர். கால்பந்தாட்ட பயிற்சியை முடித்துவிட்டு, குகைக்குள் சாகச பயணம் மேற்கொள்ள அந்த 13 பேர் உள்ளே சென்றுள்ளனர். பிறகு அவர்கள் மாட்டிக்கொண்டதை எட்டு நாட்களுக்கு பின்னர்தான் கண்டுபிடித்தது இராணுவம். மழை அதிகமாக பொழிந்துவந்ததால் குகைக்குள் தண்ணீர் ஏறிக்கொண்டே சென்றது. அது வறண்டுபோக நான்கு மாத காலம் எடுத்துக்கொள்ளும் அதுவரை சிறுவர்கள் அங்கேயேஇருக்கட்டும் என்று தாய் இராணுவம் தெரிவித்தது. உள்ளே மாட்டிக்கொண்டவர்களுக்கு மூச்சு விடவும்,சாப்பாடும் ஸ்கூபா டைவர்ஸ் மூலமாக தொலை தூரம் உள்ளே சென்று கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி நடந்துகொண்டிருப்பதை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த உலகமக்கள் அனைவரும் பிராத்தனை செய்யாத நேரம் இல்லை. உலகமுழுவதிலும் இருந்து பல்வேறு உதவிகள் இந்த சிறுவர்களுக்காக வந்தது. அப்படி வந்தவர்கள்தான் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கூபா டைவர்ஸ். இந்த மீட்புப்பணியில் பல்வேறு மக்கள் உதவிசெய்துள்ளனர் அதில் இரண்டு இந்தியர்களும் அடக்கம்.

Advertisment

புனே நகரத்தை சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர் லிமிடேட் என்ற பம்ப் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு இன்ஜினியர்கள் அந்த மீட்புக்குழுவில் தொழில்நுட்ப துறையில் செயல்பட்டனர். பிரசாத் குல்கர்னி மற்றும் ஷ்யாம் ஷுக்லா என்ற அந்த இன்ஜினியர்கள் ஜூலை 5 ஆம் தேதி அந்த குகைக்கு சென்று சிறுவர்களை மீட்கும் மீட்பு குழுவில் சேர்ந்தனர். குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற இவ்விருவர்களும் அதில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குகையில் நீர் அதிகரித்துக்கொண்டும், குகையின் அமைப்பு ஆழமாக இருந்ததால் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்ததாக மீட்பு பணியில் கலந்துகொண்ட குல்கர்னி தெரிவித்துள்ளார்.

Advertisment

இறுதியில் குகைக்குள் இருந்த சிறுவர்கள் மூன்று கட்டமாக வெளியேற்றப்பட்டனர். முதல் கட்டத்தில் நான்கு பேர்களை வெளியேற்றினர். அடுத்த நாளில் அடுத்த நான்கு பேரை வெளியேற்றினனர். ஜூலை 10 ஆம் தேதி கடைசி கட்ட மீட்பில் ஐந்து பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது இந்த விஷயம் உலகமுழுக்க பெருமையாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதில் நம் தேசத்தை சேர்ந்தவர்களும் உதவி செய்துள்ளார்கள் என்று நினைக்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது.

Thailand football team
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe