Advertisment

'நாசா'வின் உயர்ந்த பதவிக்கு தேர்வாகியுள்ள இந்திய பெண்மணி!!

Indian woman selected for NASA's highest designation!!

உலகத்தின் சிறந்த விண்வெளி ஆராய்ச்சி மையமாக கருதப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயல் தலைவராகஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணிதேர்வாகி உள்ளது, நாட்டிற்கே பெரும் சந்தோஷமான ஒன்றாக கருதப்படுகிறது.

Advertisment

கமாலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை போன்ற இன்னும் பல இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்களின் திறமையால் உயர்ந்த பதவிகளில் தேர்ந்து பணியாற்றி வருகின்ற இந்தச் சூழலில் நாசாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மனி தேர்வாகியிருப்பது கூடுதல் பெருமைக்குரியதாகப் பார்க்கப்டுகிறது.

Advertisment

நாசாவின் செயல் தலைவராக தேர்வாகியுள்ள அமெரிக்க இந்தியரான பவ்யா லால், அமெரிக்காவின் மசாசு செட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அணுசக்தி பொறியியல் துறையில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்.ஜார்ஜ் வாஷிங்கடன் பல்கலைகழகத்தில், பொது கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இவர் இதற்கு முன்னர் பல முக்கியப் பதவிகளில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. ஜோ பைடன் அதிபராக பதவியேற்றபோது, அதிகார மாற்றத்திற்கான மதிப்பீட்டுக் குழுவில் இடம்பெற்றவர். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பவ்யா லால்.

indian woman NASA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe