Indian in US presidential election!

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்கஅதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்கஅதிபரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது

Advertisment

2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்கஅதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இந்தத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் திரட்ட ஆரம்பித்துவிட்டார்.

Advertisment

இதனிடையே, குடியரசுக் கட்சியில் நிர்வாகியாக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேவும் அதிபர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட விருப்பமனுவைத்தாக்கல் செய்துள்ளார். அரசியல் பயணத்தில் தனது சாதனைகள் குறித்து காணொலிஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விவேக் ராமசாமியும் போட்டியிடுவதற்காக விருப்பமனுவைத்தாக்கல் செய்துள்ளார். 37 வயதான விவேக் ராமசாமி ஒரு தொழிலதிபர்.

கேரள மாநிலம் வடக்கஞ்சேரியை சேர்ந்த விவேக் ராமசாமியின் தந்தை எலக்ட்ரிக் இன்ஜினியர். தாயார் மனநல மருத்துவர். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் பிறந்த விவேக் ராமசாமி, தற்போது குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் சில தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே டிரம்பிற்கு எதிராக விருப்பமனுக்களைத்தாக்கல் செய்துள்ளதுகுழப்பத்தையும், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு பெரும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.