Indian travels to the International Space Station

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் நாளை (10.06.2025) மாலை இந்திய நேரப்படி 05.52 மணிக்குச் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஒரு குழுவினர் பயணிக்க உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டில் நாளை புறப்பட உள்ளனர். இதில் முதல் முறையாக இந்தியரான சுபான்சு சுக்லா என்பவர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குப் பயணிக்க உள்ளார்.

Advertisment

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களில் ஒரு விண்வெளி வீரராக இவர் உள்ளார். இவர் நிசாம் போர் என்ற திட்டத்தின் அடிப்படையில் விண்வெளிக்குப் பயணிக்க உள்ளார். இந்த பயணத் திட்டத்தின்படி 15 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன் பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளார். முன்னதாக பல்வேறு நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களும் சர்வதேச விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.

Advertisment

இருப்பினும் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய விமானப்படையின் கேப்டனாக இருப்பவரும், நேரடி இந்தியராகவும் உள்ள சுபான்சு சுக்லா செல்ல உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இவர் பெங்களூரில் உள்ள விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருபவர் ஆவார். அதோடு ககன்யான் திட்டத்திற்காக ரஷ்யாவிற்குச் சென்று அங்குப் பயிற்சிகளை மேற்கொண்டவர் ஆவார். இது போன்று பல்வேறு திறமைகள் கொண்ட சுபான்சு சுக்லா விண்வெளிக்கு இந்தியராக முதல்முறையாகப் பயணிக்க உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.