அமெரிக்காவில் உறுதிசெய்யப்பட்ட இந்திய வகை கரோனா!

indian double mutant

இந்தியாவில் கரோனாபரவல் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்காஎன மூன்று வகையான மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ்கள் பரவி வரும் நிலையில், சமீபத்தில் இரட்டை மரபணு மாற்றமடைந்தகரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் குறித்து விரைவில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும் என மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தநிலையில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரட்டை மரபணு மாற்றமடைந்த கரோனாவைரஸ், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் ஸ்டான்ஃபோர்டு மருத்துவ வைராலஜி ஆய்வகம், இந்த இரட்டை மரபணு மாற்றமடைந்த கரோனாவால் பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்துள்ளது.

இந்த இந்திய வகை கரோனாவில் ஒரு மரபணு மாற்றம், கலிஃபோர்னியாவில் மாற்றமடைந்த கரோனா வைரஸோடுஒத்துப்போவதாகக்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலருக்கு இந்த இந்திய வகை கரோனாபரவியிருக்கலாம் என ஸ்டான்ஃபோர்டு பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

America corona virus India
இதையும் படியுங்கள்
Subscribe