Advertisment

கொரோனா வைரஸ் அச்சத்தையும் மீறி சீன பெண்ணை கரம்பிடித்த இந்தியர்!

சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. நோய் பரவுவதை தடுக்க சில நாடுகள் சீனாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

Advertisment

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சீனாவை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சத்யார்த் என்ற இளைஞரும், சீனாவை சேர்ந்த ஷிகா என்ற பெண்ணும் கனடாவில் ஒன்றாக வேலை பார்த்த போது ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணமும் மாண்டஸரில் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தற்காலிகமாக திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன பெண்ணை இந்தியர் ஒருவர் திருமணம் செய்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
marriage
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe