Advertisment

இந்தியர்கள் உண்பது ஆரோக்கியமற்ற உணவு... அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்...

உலகெங்கிலும் உள்ள 12 நாடுகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களின் சுகாதாரம் குறித்து ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.

Advertisment

indian junk foods are more dangerous

உலகெங்கிலும் உள்ள 12 வெவ்வேறு நாடுகளிலிருந்தும், பிராந்தியங்களிலிருந்தும் 400,000க்கும் மேற்பட்ட உணவுகள் மற்றும் பானங்களின் ஆரோக்கியத்தை இந்த கணக்கெடுப்பு ஒப்பிட்டுப் பார்த்து உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் ஆரோக்கியம் குறைந்தவையாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி சீனாவில் தயாரிக்கப்படும் உணவுகள் தான் மிக மோசமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டில் தயாரிக்கப்படும் பாக்கெட் உணவுக மற்றும் குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சர்க்கரை, மற்றும் கொழுப்பு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் தான் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பையாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் தயாரிக்கப்பட்டபொருட்களில் 100 கிராமுக்கு 1515 கேஜே ஆற்றல் இருப்பதாகவும், 100 கிராமுக்கு 7.3 கிராம் சர்க்கரை இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஆரோக்கியமான உணவுகள் தயாரிப்பதில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் தயாரிப்புகள் இரண்டாவது இடத்தைப் பிடித்தன.

china India Food saftey
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe