indian girl

அமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் எனும் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கால் இடறி விழுந்து இந்தியப் பெண்மணி ஒருவர் பலியான, துயரச் சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கமலா. தற்போது அமெரிக்காவில் பணி செய்து வருகிறார். சமீபத்தில் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கமலா தன்னுடைய வருங்கால கணவருடன் இணைந்து, தன்னுடைய நெருங்கிய உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின் அங்கிருந்து வீடு திரும்பும் போது, வரும் வழியில் இருந்த பால்ட் ரிவர் எனும் நீர்வீழ்ச்சியில் இருவரும் இணைந்து செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் கால்இடறி விழுந்துள்ளனர். நீரின் வேகத்தில் சிலஅடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கமலா மீட்புப் படையினரால் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது வருங்காலகணவர் சில காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார்.

Advertisment

இருவருக்கும் இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இத்தகைய துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.