/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fisher444.jpg)
இலங்கை யாழ்ப்பாணத்தில் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு, மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இலங்கை கடற்பகுதிகளில் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தும் உத்தரவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்துப்பூர்வமாகப் பிறப்பிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். அதற்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த மீனவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பருத்தித்துறை உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் காவல்துறையினர், கடற்படையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல், மீனவர்கள் முன்னெடுத்துள்ளப் போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், இலங்கை மீனவர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)