Advertisment

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் சந்திப்பு!

Indian Ambassador to Spain meets with CM MK Stalin 

Advertisment

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையொட்டி ஸ்பெயினில் இன்று (29.01.2024) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தாக உள்ளது.

முன்னதாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டின்,மேட்ரிட்சென்றடைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே.பட்நாயக்தூதரக அதிகாரிகளோடுமலர்க்கொத்துவழங்கி வரவேற்றார். மேலும் ஸ்பெயின் பயணம் வெற்றிபெறுவதற்குத்தனதுவாழ்த்துகளைத்தெரிவித்தார். இச்சந்திப்பின்போது தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உடன் இருந்தார்.

spain
இதையும் படியுங்கள்
Subscribe