Skip to main content

இந்திய விமானப்படையுடன் இணைந்த 'அப்பாச்சி ஹெலிகாப்டர்' !

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

அமெரிக்காவில்  உள்ள போயிங் நிறுவனம் தயாரித்த "அப்பாச்சி ஹெலிகாப்டர்" (APACHE ATTACK HELICOPTER) இந்திய விமானப் படையிடம் (INDIAN AIR FORCE- IAF) இன்று ஒப்படைக்கப்பட்டது. 2015 ஆம்  ஆண்டு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமெரிக்கா அரசிடம் "அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்" 22 வாங்க ஒப்பந்தம் செய்தது. இதை உலகளவில் விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான போயிங் நிறுவனம் (BOEING) தயாரித்துள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டரை அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் இருநாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

BOEING

 

மேலும் இந்த ஹெலிகாப்டரின் புகைப்படத்தை இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வசதிகளுடன்  உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டரை அமெரிக்காவிடம் இருந்து பெரும் முதல் நாடு என இந்தியா விமானப்படை தெரிவித்துள்ளது. அதே போல் இந்திய விமானப்படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இந்த ஹெலிகாப்டரை இயக்குவது குறித்த பயிற்சியை அமெரிக்கா ராணுவ அதிகாரிகள்  இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு  வழங்க உள்ளதாகவும்  தெரிவித்தனர்.

 

HELICOPTER

 

அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர் பராமரிப்பு பணியை அமெரிக்கா போயிங் நிறுவனமே மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் இந்திய விமானப்படை அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பெற்றதன் மூலம்   தனக்கென்று தனி முத்திரையை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் போர் காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டரை அமெரிக்கா ராணுவம் அதிக அளவில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

oxygen cylinders arrived chennai airport

 

இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி போடும் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் ஆகியோருடன் கரோனா தடுப்பூசிகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

அதேபோல் மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய அமைச்சரவையின் செயலாளர் உள்ளிட்டோரும் மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

oxygen cylinders arrived chennai airport

 

இருப்பினும், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பும் பணியை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் பணியில் இந்திய விமானப் படையின் விமானங்களும் ரயில்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் டேங்கர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு விமானம் மூலம் அனுப்பி வருகின்றன. இதனை, அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து அனுப்பி வருகிறது. 

oxygen cylinders arrived chennai airport

 

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் லண்டனிலிருந்து 46.6 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று (04/05/2021) அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தன. லண்டனில் இருந்து எகிப்து வழியாக விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

இந்தியாவிற்கு வந்தது...அதி நவீன 'அப்பாச்சி கார்டியன் அட்டாக் ஹெலிகாப்டர்கள்'!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனம் தயாரித்த "அப்பாச்சி கார்டியன் அட்டாக் ஹெலிகாப்டர்கள்" (APACHE GUARDIAN ATTACK HELICOPTER- AH 64 E) இந்திய விமானப் படையிடம் (INDIAN AIR FORCE- IAF) நேற்று ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்டமாக நான்கு ஹெலிகாப்டர்களை அன்டோனோவ் ஏஎன் 224 ( Antonov AN 224 ) சரக்கு விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பியது போயிங் நிறுவனம். இந்த விமானம் நேற்று இரவு உத்தரபிரதேசம் மாநிலத்தில் காசியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹிண்டன் விமான நிலையத்திற்கு வந்தது. அதன் பிறகு சரக்கு விமானத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானதளத்திற்கு கொண்டு செல்லப்படும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

APACHE GUARDIAN ATTACK HELICOPTER- AH 64 E four arrive at india gaziabad in uttar pradesh state

 

 

இது தொடர்பாக 'போயிங் நிறுவனம்' வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அடுத்த வாரம் மீண்டும் நான்கு "அப்பாச்சி கார்டியன் அட்டாக் ஹெலிகாப்டர்கள்" இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் 2020- ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஹெலிகாப்டர்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என போயிங் நிறுவனம் அதிகாரப்பூர்வாமாக தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமெரிக்கா அரசிடம் "அப்பாச்சி கார்டியன் அட்டாக் ஹெலிகாப்டர்கள்" 22 வாங்க ஒப்பந்தம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த வகை ஹெலிகாப்டரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம். AH-64 E வகை ஹெலிகாப்டர் என்பது உலகின் மிக முன்னேறிய மல்டி-ரோல் போர் வகை ஹெலிகாப்டர் ஆகும்.

 

 

 

APACHE GUARDIAN ATTACK HELICOPTER- AH 64 E four arrive at india gaziabad in uttar pradesh state

 

 

 

இதுவரை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 2,200 க்கும் மேற்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது போயிங் நிறுவனம். அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் நாடுகளின் பட்டியலில் 14- வது நாடாக இந்தியா உள்ளது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் போர் காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டரை அமெரிக்கா ராணுவம் அதிக அளவில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க விமானப்படை அதிகாரிகளால், இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு இரண்டு வருடம் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும், அதன் பிறகே அப்பாச்சி ஹெலிகாப்டரை இயக்க விமானிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், லிபியா நாடுகளில் போர் சூழல் ஏற்பட்ட காலங்களில் இந்த வகை ஹெலிகாப்டரை அமெரிக்கா ராணுவம் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.