Skip to main content

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு வைத்த நிலையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.

 

india won the match

 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா 140  ரன்களையும், விராட் கோலி 77 ரன்களையும், லோகேஷ் ராகுல் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிகர் தவானுக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார்.

 

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது அமீர் 3 விக்கெட்டுகளையும், ஹஸன் அலி, ரியாஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த ரன்களில் இதுவே அதிக ரன்கள் ஆகும்.

மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு 302 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. இருப்பினும் 40 ஓவரில் 6 விக்கட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்து தோற்றது பாகிஸ்தான்.

 

உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிற வரலாறை மீண்டும் இந்திய அணி தக்கவைத்துள்ளது. தொடர்ந்து ஏழாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார்.