ADVERTISEMENT

வெனிசுலாவுடன் இந்திய மதிப்பில் கச்சா எண்ணெய் வர்த்தகம்... முட்டுக்கட்டை போடுகிறதா அமெரிக்கா...?

12:47 PM Mar 13, 2019 | tarivazhagan

இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலாளர் விஜய் கோக்லெவும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் சந்தித்து பேசியபின், வெனிசுலாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. சமீபத்தில் இந்தியா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்திய ரூபாயிலும், பண்டமாற்று முறையிலும் வாங்குவதற்கு இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது அதன்படியே இந்தியா அந்த நாட்டினிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கிவருகிறது. அதனை தொடர்ந்து வெனிசுலவும் இந்தியாவுடன் இந்திய ரூபாயைகொண்டு கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்வதற்கு ஆலோசனை நடத்திவருகிறது.


இதற்காக வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் மதிப்பிலேயே கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

இந்த நிலையில் இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலாளர் விஜய் கோக்லெவும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் சந்தித்து பேசினர் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, “நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் கேட்பது போலவே இந்தியாவிடமும் இதனை கேட்கிறோம். வெனிசுலா அதிபர் மதுரோ அரசிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று நம்புகிறோம். இந்தியா வெனிசுலா மக்களுக்கு இடையே உள்ள அச்சத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். இது ஆரோக்கியமான உரையாடலாக இருந்தது. இங்கு நடந்த உரையாடல்களை பற்றி விவரவங்களை தெரிவிக்க இயலாது. இது தனிப்பட்ட உரையாடல்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT