ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரின் தெற்கு வீதியில் ‘தி கரி கிளப் இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை நிலிஷ் டோக்கே என்பவர் நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு விரைந்த ஆஸ்திரேலியா உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உணவு பொருட்கள் பாதுகாப்பு இன்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

restaurants

Advertisment

Advertisment

இதன் காரணமாக உணவுப்பொருட்களை பாதுகாப்பதிலும், தூய்மையான தரத்தில் உணவக வளாகத்தை பராமரிப்பதிலும் தவறியது உள்ளிட்ட 7 விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறி விட்டதாக அதிகாரிகள் கூறினார். இதையடுத்து அந்த உணவகத்துக்கு 25 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ரூ.12.50 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து உணவகத்தின் அதிபர் நிலிஷ் டோக்கே கூறுகையில், “ உணவகத்தில் சோதனை நடந்தபோது நான் இல்லை. இருப்பினும் மறுநாளே உணவகம் தூய்மைப்படுத்தப்பட்டு முழுமையான தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.