Advertisment

ஒரே நாளில் 5 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு - திணறும் அமெரிக்கா!

corona

Advertisment

உலகமெங்கிலும் கரோனாமீண்டும் அச்சுறுத்தலை தொடங்கியுள்ளது. கரோனாவால்மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிலும், தற்போது மீண்டும் கரோனாபாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது அந்தநாட்டில்ஏற்பட்டுள்ள கரோனாஅலைக்கு ஒமிக்ரான்பாதிப்பேகாரணம் என கருதப்படுகிறது.

இந்த சூழலில்அமெரிக்காவில் ஒரேநாளில்5 லட்சத்து 87 ஆயிரத்து 564 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கரோனாபாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.இதில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

America pandemic
இதையும் படியுங்கள்
Subscribe