modi sirisena

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையில், அதிபர் சிறிசேனாவை இந்திய உளவு அமைப்பன ரா கொல்ல சதி திட்டம் தீட்டிவருகிறது .இது இந்திய பிரதமர் மோடிக்கே தெரியாது என்று அங்கு சில ஊடகங்கள் செய்திகள் பரப்பின. இச்செய்தி வெளியான பின்பு இலங்கை முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இதை இலங்கை அரசு முற்றிலுமாக மறுத்து உள்ளது.

Advertisment

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொல்ல சதி செய்ததாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா குற்றம் சாட்டவில்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

முன்னதாக, நேற்று முன்தினம் இலங்கையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய சிறிசேனா,” “இந்தியா மற்றும் இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல திட்டமிட்டது. ஆனால், இந்த திட்டம் குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை முற்றிலுமாக மறுத்துள்ளது இலங்கை அரசு.