இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகின. அதில், அதில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த அவரது சகோதரருமான கோத்தபய ராஜபக்ச அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கடந்த திங்கள்கிழமையன்று அனுராதபுரத்தில் கோத்தபய ராஜபக்ச இலங்கையின் 8ஆவது அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கொழும்புவில் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கோத்தபய ராஜபக்சவின் வெற்றிக்குப் பின் இலங்கை சென்ற முதலாவது வெளிநாட்டு அமைச்சர் என்ற பெருமையை பெற்ற ஜெய்சங்கர் இந்தியாவுக்கு வருமாறு கோத்தபயவுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள கோத்தபய ராஜபக்ச, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.