Skip to main content

"சரியான நேரத்தில் இந்த ஜி20 தலைமையை இந்தியா பெற்றுள்ளது" - ரிஷி சுனக் 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

"India has got this G20 leadership at the right time" - Rishi Sunak

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். ஜி20 மாநாடு துவங்க இரண்டே நாட்கள் இருக்கும் தருணத்தில், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் நேர்காணல் வைரலாகி வருகிறது. அதில், "இந்தியா சரியான நேரத்தில் இந்த ஜி20 தலைமையை வகித்துள்ளது" எனவும் பேசியுள்ளார்.  

 

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக், நேற்று ஒரு பத்திரிகை முகமைக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், “இந்தியாவின் அளவுகோலும், பன்முகத்தன்மை மற்றும் இதன் அசாதாரண வெற்றிகளை வைத்து பார்த்தால், சரியான நேரத்தில் இந்த ஜி20 தலைமையை இந்தியா பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இந்தியா இத்தகைய உலகளாவிய தலைமையை வெளிப்படுத்துவதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், பிரிட்டன், ஜி20 தலைமை நாடான இந்தியாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு உலகளாவிய பிரச்சனைகளையும், உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது முதல் பருவநிலை மாற்றத்தைக் கையாள்வது வரை இயங்கவிருக்கிறோம். இந்த 2023ம் ஆண்டு இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய ஆண்டாகும். ஏனெனில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து ஜி20 கூட்டங்கள், அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பை என இந்த ஆண்டின் மிகப்பெரிய உலகளாவிய புவிசார் அரசியல் நிகழ்வுகளின் தாயகமாக இந்தியா உள்ளது". மேலும், ஜி20 உச்சி மாநாட்டின் வெளிப்பாடு எவ்விதம் இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க இந்தியாவிற்கு பிரிட்டன் உறுதுணையாக இருக்கும்" எனப் பேசினார்.

 

ரிஷி சுனக் பேசுகையில், "எனது மனைவி இந்தியராகவும் பெருமைமிக்க இந்துவாகவும் இருப்பதால் இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் எனக்கு எப்போதும் தொடர்பு இருந்து வருகிறது. மேலும், எனது இந்திய வம்சாவளிகள் குறித்தும் இந்தியாவுடன் எனக்கிருக்கும் தொடர்பு குறித்தும் நான் பெருமைப்படுகிறேன்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்