ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த குண்டு வெடிப்பினால் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்த வெடிவிபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். பல அப்பாவி காஷ்மீரி மக்கள், இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த கருத்திற்கு தக்க பதிலடியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், ”எங்கள் நாட்டு சம்பவத்தை விமர்சிக்காமல், பாகிஸ்தானுக்குள் இருக்கும் தீவிரவாத பிரச்சனைகளை சரி செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளது.