Skip to main content

'பேங்க் ஆப் இங்கிலாந்து' வங்கியின் அடுத்த ஆளுநர் ரகுராம் ராஜன்?

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

இங்கிலாந்து நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த வங்கியாக 'பேங்க் ஆப் இங்கிலாந்து' வங்கி (BANK OF ENGLAND)திகழ்கிறது. இந்த வங்கி முந்தைய காலங்களில் தனியார் வங்கியாக இருந்த நிலையில் , தற்போது இங்கிலாந்து அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் "பேங்க் ஆப் இந்தியா" ஆளுநராக உள்ள 'மார்க் கார்னே' பதவிக்காலம் அடுத்த (2020) வருடம் ஜனவரி 31 ஆம் தேதி முடிவடையும் நிலையில் அடுத்த ஆளுநரை நியமிக்க இங்கிலாந்து அரசு திவீரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் ரகுராம் ராஜன் பெயரை அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளதாக இங்கிலாந்து நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

 

BANK OF ENGLAND

 

தற்போது ரகுராம் ராஜன் யூனிவர்சிட்டி ஆப் சிகாகோ பூத் பிசினெஸ் ஸ்கூல் (UNIVERSITY OF CHICACO BOOTH BUSINESS SCHOOLS) பணியாற்றி வருகிறார். இந்திய ரிசர்வ் வங்கியில் 23-வது கவர்னராக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பணியாற்றினார். உலகளவில் பொருளாதாரத்தில் சிறந்த வல்லுனரான ரகுராம் ராஜன் திகழ்கிறார். அதே போல் இவரது பணிக் காலத்தில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது .. இவருக்கு 2019- ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான பரிந்துரையில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இந்தியர் இங்கிலாந்து வங்கியில் ஆளுநராக நியமிப்பது இதுவே முதல் முறை. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்றே கடைசி - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

TODAY LAST- PETROL PUNK OWNER'S ASSOCIATION NOTICE

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

 

TODAY LAST- PETROL PUNK OWNER'S ASSOCIATION NOTICE

 

மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் எனவும், 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். இன்று செப்.28 ஆம் தேதி என்ற நிலையில் இன்று மட்டுமே பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் தாள்கள் பெறப்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. செப்.30 அரையாண்டு முடிவு நாள் என்பதால் 29 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றால் செப்.30 வங்கிகளில் மாற்றுவது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறை ஊழியர்கள் 2000 ரூபாயை பயணிகளிடம் இருந்து பெறக்கூடாது. அப்படி பெற்றால் 2000 ரூபாயை பெற்றவர்களே அதற்கு பொறுப்பு எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பேருந்தில் 2000 ரூபாய் நோட்டுகளை நடத்துநர்கள் பெறலாமா? - தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம்

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Can Conductors Receive 2000 Notes in Buses?-Tamil Transport Department Clarification

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. 

 

NM

 

இந்நிலையில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. நேற்றைய தினம் திருநெல்வேலி உட்பட சில போக்குவரத்து கோட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பணிமனைகளின் சார்பில் போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடமிருந்து வாங்க வேண்டாம், அப்படி வாங்கும் பொழுது அந்த நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து மாற்று ரூபாய் தாள்களாக மாற்றுவதில் சிக்கல் இருப்பதால் பயணிகளிடம் பக்குவமாக இது குறித்து எடுத்துக் கூறி இடையூறு ஏற்படாமல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறு கூறப்பட்டிருந்தது.

 

இந்த தகவல் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில் அதிகாரப்பூர்வமான விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பேருந்தில் பயணிக்கக் கூடிய பயணிகளிடம் 2000 ரூபாய் தாள்களை பெறுவதற்கு நடத்துநர்களுக்கு எந்த தடையும் இல்லை. எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் தாளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.