Skip to main content

எல்லைப் பிரச்சனையைக் களைய இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்... சீனா தகவல் !!!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

china

 

லடாக் எல்லைப்பகுதில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்தியா சீனா மோதலையடுத்து இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவியது. சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தியாவில் வலுப்பெற்றது. பின் இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி சீன செயலிகளுக்குத் தடை விதித்தது. எல்லை முரண்களைக் களைய இரு நாடுகள் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதனையடுத்து தன்னுடைய சுதந்திர தினவிழா உரையின்போது பேசிய பிரதமர் மோடி, எல்லையில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சீனா மற்றும் பாகிஸ்தானை கண்டித்துப் பேசினார். அந்த உரைக்குப் பின், எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

 

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷோ லிஜியான் இது குறித்து கூறும் போது, "பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை நாங்கள் கவனித்தோம். நம் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்பது தான் சரியான ஒன்றாக இருக்கும். நாம் இருவருமே நெருக்கமான நாடுகள். ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடுகளாக நாம் இருக்கிறோம். நம்முடைய முன்னேற்றம் என்பது நம்முடைய பிராந்தியம் மற்றும் உலகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், எல்லை முரண்களைக் களையவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்