Advertisment

இந்தியாவில் கூல்ட்ரிங்க்ஸைவிட 1ஜிபி டேட்டா விலை குறைவு- மோடி பெருமிதம்

மோடி

Advertisment

இந்தியா - ஜப்பான் இடையிலான 13 வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள மோடி. டோக்கியோ நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

”இந்தியர்கள் உலகம் முழுவதும் தீபாவளி வெளிச்சம்போல் பரவி இருக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள், உலகில் எங்கு சென்றாலும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார்கள். இந்து மதமோ, புத்த மதமோ இவ்விரு மதத்தின் மூலம் ஒன்றுதான். ஜப்பானியர்கள் இந்துக்கடவுள்களையும் வழிபடுகின்றனர். இந்தியாவிலும், ஜப்பானிலும் சேவை என்ற சொல் ஒன்றுதான்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், ”மேக் இன் இந்தியா உலக அடையாளமாக மாறியுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் மேக் இன் இந்தியா மூலம் பொருட்களை தாயரிக்கின்றன. டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது. இந்திய கிராமங்களுக்குள் பிராட்பேண்ட் வசதி சென்றடைந்துள்ளது. இந்தியாவில் 1ஜிபி டேட்டாவின் விலை சிறிய குளிர்பானத்தைவிட விலை குறைவு” என்றார்.

india-japan summit Japan shinzo abe modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe