ADVERTISEMENT

நெருங்கி வரும் பாகிஸ்தான் பொதுத்தேர்தல்; தேர்தல் ஆணையம் வெளியே குண்டுவெடிப்பு!

11:36 AM Feb 05, 2024 | mathi23

பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், இன்னும் சில நாள்களில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் - இ - இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

ADVERTISEMENT

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30க்கும் மேற்பட்ட சிறைதண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும், இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் நெருங்கும் இந்த நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT