280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பல் இன்று (20.07.2025) கடலில் பயணத்தை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் சொகுசு கப்பலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது கப்பலின் மற்றப் பகுதிகளுக்கு மளமளவெனப் பரவி கப்பல் முழுவதுமாக தீபற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உயிரைத் தற்காத்துக் கொள்ளக் கடலில் குதித்தனர்.
இதனையடுத்து அவர்களை மீட்கும் பணியானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா?. காயங்கள் ஏற்பட்டிருக்கிறதா? போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை. எனவே இந்த மீட்புப் பணிகள் முற்றிலுமாக முடிந்த பிறகே இந்த தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா? எனத் தெரியவரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.