admk

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத்தேர்தலுக்கான பிரச்சார முன்னெடுப்புகளை ஒவ்வொரு கட்சியும் மேற்கொண்டு வருகிறது.அதேபோலஅதிமுக தலைமையும் பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.திருச்சியில் இன்றுமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisment

இந்நிலையில், திருச்சி அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனத்தைமர்மநபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.திருச்சி வரகனேரிபகுதிக்கு,தேர்தல் பரப்புரைக்காகச் சென்ற முதல்வரின் மாற்று வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதல்வரின் மாற்று வாகனத்தைச் சேதப்படுத்தியவர்கள் பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.