Advertisment

யூடியூப் பார்த்து பாப்கான் செய்ய முயற்சித்த 14 வயது சிறுமி உயிரிழப்பு!    

யூடியூப்பார்த்து பாப்கான் செய்ய முயற்சித்த 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவமும், அதற்கு சம்பந்தப்பட்ட யூடியூப் வீடியோ பதிவர் மன்னிப்பு கோரிய சம்பவம்நிகழ்ந்துள்ளது.

Advertisment

சீனாவை சேர்ந்தயா என்ற பெண் யூடியூப் எனப்படும் சமூக காணொளி வலைதளத்தில்பாப்கான் எப்படி தயாரிப்பது என்று வீடியோவை பதிவிட்டுள்ளார்.காலியான பெப்சி டின்பாட்டிலை கொண்டு எப்படி பாப்கான் தயாரிப்பது என்ற வீடியோவை அவருடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

  the incident of 14-year-old girl trying to popcorn on YouTube

சுமார் 4 கோடி பின் தொடர்பவர்களைகொண்டுள்ள அந்த யூடியூப் சேனலில் வெளியான அந்த வீடியோவை பார்த்த சேசேஎன்ற 14 வயது சிறுமி தனது தோழியுடன் சேர்ந்து அந்த வீடியோவில் குறிப்பிட்டது போன்று டின்னில்பாப்கான் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் ஆல்கஹால் டின்னை பயன்படுத்தியதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 93 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இரண்டு வார சிகிச்சைக்கு பின்சிகிச்சைபலனளிக்காமல் உயிரிழந்தார். உடனிருந்தஅவரது தோழி 13 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

  the incident of 14-year-old girl trying to popcorn on YouTube  the incident of 14-year-old girl trying to popcorn on YouTube

சிறுமியின் இந்த உயிரிழப்புக்கு யூடியூபில் பதிவு செய்யப்பட்டஅந்த வீடியோ பதிவுதான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கு வீடியோவை வெளியிட்ட அந்த இளம்பெண் இழப்பீடு வழங்கியதோடு மன்னிப்பும் கோரியுள்ளார். எச்சரிக்கை வாசகம் வீடியோவில் குறிப்பிடப்படாததுதன்னுடைய தவறுதான் என்றாலும் சிறுமி தான் பதிவிட்ட வீடியோவில் உபயோகப்படுத்திய உபகரணங்களை பயன்படுத்தாமல் ஆல்கஹால் டின்னைபயன்படுத்தினால்தான் இந்த விபரீதம் நடந்திருக்கிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

girl china death Youtube
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe