பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்த போது தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்ததாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் இம்ரான்கான் குற்றவாளி என கூறி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்திருந்தது. மேலும் உடனடியாக இம்ரான் கானை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் இம்ரான் பிணையில் வெளிவரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.