imr

Advertisment

கர்தார்பூர் சாலை அடிக்கல் நாட்டு விழா தற்பொழுது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டுள்ளார்.இதில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த சாலை அமைக்கும் திட்டம் இந்தியா பாகிஸ்தான் உறவில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும் என கூறினார். மேலும் இரு நாட்டு உறவுகளையும் வளர்க்க இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கும் எனவும் கூறினார். பாகிஸ்தான் உடனான நட்புக்காக சித்து விமர்சிக்கப்படுவது குறித்து பேசிய அவர் "சித்து மிகவும் நல்ல மனிதர், அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என கூறினார்.