Advertisment

இம்ரான்கான் காயம்; பதற்றத்தில் பாகிஸ்தான்

Imran Khan injured; Pakistan in tension

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத்தீர்மானத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது ஷபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவி வகிக்கிறார். அவருக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களை நடத்திவரும் இம்ரான்கான், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

Advertisment

இந்நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான் கட்சி போராட்டம், பேரணி ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. பேரணி வாயிலாக தங்கள் எதிர்ப்புகளை இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்தவர்கள் எழுப்பி வந்த நிலையில் பாகிஸ்தானின் வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கான் காயமடைந்துள்ளதாகவும், அதேபோல் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிஉள்ளது.

Advertisment

இந்நிலையில் இம்ரான்கானின் கார் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசு சார்பில் இது தொடர்பாக எந்தத்தகவல்களும் வெளியிடாத நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்தச் செய்திகள் வெளியாகியது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இம்ரான்கான் காயமடைந்திருப்பதை உறுதி செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானில்பதற்றம் தொற்றியுள்ளது.

Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe