imran

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் பலுசிஸ்தான் வாக்குச்சாவடியில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

Advertisment

பலுசிஸ்த்தான் வாக்குச்சாவடியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 31 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

தற்போது அதை பற்றி தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில்,”குவெட்டாவில் நடந்த தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக வருந்துகிறேன். பாகிஸ்தானின் எதிரிகள் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயல்கிறார்கள். பாகிஸ்தானியர்கள் வலியுடன் வெளியே வந்து தங்கள் வாக்கை பதிவிட்டு தீவிரவாதிகளின் திட்டத்தை தோற்கடிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

காலை 8மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு நாளை தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் முடிவை வெளியிடப்படும்.