imran khan

Advertisment

பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான், நேற்று தனது இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

பிரதமர், தலைமை நீதிபதி, செனட் தலைவர், முதல்வர்கள் ஆகியோர் சர்வதேச விமான பயணங்களில் பயணம் செய்யும் போது முதல் வகுப்பில் பயணம் செய்வதை தடைவிதித்துள்ளனர். ஏனென்றால், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானத்தின் முதல் வகுப்பு கட்டணம், மற்ற வகை வணிக வகுப்பு, க்ளப் வகுப்பு ஆகியவற்றை விட 300 மடங்கு அதிகமாகும்.

மேலும் ஒரு மாற்றமாக பாகிஸ்தானில் இதுவரை அரசுதுறைகளின் வேலை நாட்கள் ஆறாக இருந்ததை, மாற்றி ஐந்து நாட்களாக்கியுள்ளனர். அதேபோல வேலை நேரத்தை காலை 8மணி முதல் 4மணி வரை இருந்ததை காலை 9மணி முதல் 5மணியாக மாற்றியுள்ளனர் .