Advertisment

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி...!

இந்தியாவிலிருந்து இதுவரை வரியில்லாமல் இறக்குமதி செய்துவந்த 50 பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Advertisment

tax

பொதுவான முன்னுரிமை நடைமுறை எனும் ஜிஎஸ்பி அடிப்படையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களில்,90 பொருட்கள் வரியில்லா இறக்குமதி பட்டியலில் இருந்தது. ஆனால், செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவில், நவம்பர் 1-ம் தேதியிலிருந்து வரியில்லா இறக்குமதி பட்டியலில் இருக்கும் 50 பொருட்கள் நீக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த 50 பொருட்களுக்கும் வரிவிதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அமெரிக்காவின் பொதுவான வரிவிகிதங்கள்படி இறக்குமதி செய்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிவிதிதுள்ள பொருள்களில் பெரும்பாலானவை இந்திய கைவினைப் பொருட்கள், விவசாயத் துறை உற்பத்தி பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

வரிவிதித்துள்ள பொருட்களில் சில, மாங்காய், எருமைத்தோல், சில வகையன இசைக் கருவிகள் மற்றும் கைவினைப் பொருட்கள்.

tax Importing India America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe