Skip to main content

”நான்தான் உங்கள் பாஸ், வாக்கெடுப்பு நடத்தி நிறுவனத்தை நடத்த முடியாது”- சுந்தர் பிச்சை

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
sundar pichai


கூகுள் நிறுவனத்திலும் பாலியல் புகார்கள் கடந்த இரண்டு வருடமாக அதிகரித்து வருவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஒ வருத்தம் தெரிவித்தார். பாலியல் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுளில் இதுபோன்ற ஒழுக்கமற்ற செயல்பாடுகளுக்காக வருத்தமும் தெரிவித்துள்ளார். 

 
இந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வந்த பாலியல் புகாரில் சுமார் 48 பேருக்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 13பேர் மூத்த மேனேஜர்கள் ஆவர். இவர்களுக்கு பணிக்கொடை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
கடந்த 2014ஆம் ஆண்டு பாலியல் புகார் காரணமாக ஆண்டிராய்டு மொபைல் ஓஎஸை உருவாக்கிய ஆண்டி ரூபின் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளியேற்றியபோது அவருக்கு 90 மில்லியன் டாலர் பணிக்கொடையாக வழங்கப்பட்டது.
 

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தில் பாலியல் புகாரில் இருப்பவர்களை அந்நிறுவனம் காப்பாற்றுகிறது என்று கூகுள் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 50,000 பேர் இந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.  தற்போது ஒரே நாளில் ஆயிரம் ஊழியர்கள் விடுமூறை எடுத்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இது போன்ற செயல்களால் நிறுவனம் கலங்கமடைந்து வருகிறது.
 

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஒ நியுயார்க்க நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  பேசுகையில்,‘‘ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அநீதி நடக்கும்போதும், தவறு இழைக்கப்படும் போதும் குரல் கொடுப்பது வரவேற்கதக்கது தான். ஆனால் எதையும் சட்டத்தின் கீழ் மட்டுமே அணுக முடியும். அவர்களின் குறைகளை கேட்டு தேவையானதை செய்துள்ளோம். நிறுவனத்தின் செயல்பாடு என்பது விருப்பு, வெறுப்புகளை கடந்தது. வாக்கெடுப்பு நடத்தி எந்த ஒரு நிறுவனத்தையும் நடத்த முடியாது. நான் தான் இன்னமும் உங்கள் மேலதிகாரி, இதனை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்