
இயற்பியல் பேராசிரியரான மொஹ்சென் ஃபக்ரிஸாதே, இரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையில் அதிகாரியாக இருந்தவர். பின்னர், 1989 -ஆம் ஆண்டு ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்டத்தின் முன்னோடியான 'அமத்' என்ற ரகசியத் திட்டத்தை முன்னெடுத்தவரான இவர், ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
சமீபத்தில், தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அப்சார்ட் நகரின் அருகே அவர்தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது,அவரதுகார், குறிவைத்துத் தாக்கப்பட்டது. அதில் அவர், சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தநிலையில்,மொஹ்சென் ஃபக்ரிஸாதே, சாட்டிலைட் மூலம் கட்டுப்படுத்தப்படும் இயந்திரத் துப்பாக்கியைவைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக, அந்நாட்டுஊடகம் ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது. மேலும், "ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த இயந்திரத் துப்பாக்கி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை குறிவைத்ததாகவும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இத்தகவல்களை, 'ஐ.ஐ.ஆர்.ஜி என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலி படாவிஅளித்ததகவல்களின் அடிப்படையில், அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)