Skip to main content

கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்?

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

உலகம் முழுவதும் கடலுக்கடியில் பல இடங்களில் உயிர்ப்புள்ள எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற எரிமலைகள் வெடித்தால் வெளியாகும் புகை மண்டலம் எவ்வளவு உயரத்துக்கு போகும் என்பதை பார்த்திருக்கிறோம்.

 If an underwater volcano erupts   How large will the blob that is formed be?

 

ஆனால், நீருக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்னாகும்? 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடல் பயணம் செய்த சில மாலுமிகள் பிரமாண்டமான காற்றுக் குமிழ்கள் கடல் மட்டத்தில் மிதப்பதை பார்த்ததாக கூறியிருக்கிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுபோன்ற குமிழ்களை பார்த்ததாக மாலுமிகள் கூறினாலும் அது என்னவாக இருக்கும் என்பதை தெரியாமல் இருந்தது. ஆனால், அது கடலுக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்பதை இப்போது கண்டுபிடித்துள்ளனர். அந்த குமிழ்கள் சுமார 500 மீட்டர் அளவுக்கு குறுக்களவு கொண்டதாக இருக்கும் என்றும், அந்தக் குமிழ் வெடித்தால் பத்தாயிரக்கணக்கான அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகும் என்றும் புவியியலாளர்கள் கூறியிருக்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் மெராபி எரிமலை! 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Merapi volcano erupts again after 13 years!

 

இந்தோனேஷியாவில் மெராபி எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது. 9721 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை தொடர்ந்து புகை மற்றும் சாம்பலைக் கக்கிவருகிறது. இதன் காரணமாக அந்த எரிமலை அருகே வசித்துவரும் மக்கள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். மேலும், இந்த எரிமலை தொடர்ந்து புகை மற்றும் சாம்பலைக் கக்கிவருவதால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர். 

 

மெராபி எரிமலையிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல் அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

 

இந்தோனேஷியாவின் மெராபி எரிமலை கடந்த 2010ம் ஆண்டு வெடித்தது. அப்போது அந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

எரிமலை வெடித்து நான்கு கி.மீ உயரத்திற்கு எழுந்த சாம்பல்... 2700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்...

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

Mount Ili Lewotolok volcano erupts in indonesia

 

 

இந்தோனேசியாவின் மவுண்ட் இலி லெவோடோலோக் எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகிறது. 

 

உலகின் அதிக எரிமலைகளைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்புகள் அண்மைக் காலங்களாகச் சற்று குறைந்துள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அந்நாட்டின் லெம்பாட்டா பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் இலி லெவோடோலோக் எரிமலை வெடித்து மிகப்பெரிய அளவிலான நெருப்பு குழம்பை வெளியிட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வானில் சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மற்றும் எரிமலை தூசிகள் சிதறின. இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியிலிருந்து சுமார் 2700 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழப்புகளோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.