Advertisment

மரணத்திற்கு பிறகும் நீங்களே பொறுப்பு - தளபதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த தலிபான் தலைவர்!

taliban supreme leader

Advertisment

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி, தங்களது இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் எப்போதும் தலைமறைவாகவே இருக்கும் தலிபான்களின் உச்ச தலைவர்ஹைபத்துல்லா அகுந்த்சாதா, அண்மையில் பொதுவெளியில் தோன்றியதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில்ஹைபத்துல்லா அகுந்த்சாதா, தனது இயக்க தளபதிகளுக்கு ஊடுருவலாளர்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை ஒன்றை விடுவித்துள்ளார். எழுத்துப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்ஹைபத்துல்லா அகுந்த்சாதா கூறியுள்ளதாவது, 'படைகளின் மூத்தவர்கள் (தளபதிகள்) அனைவரும், அரசின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் யாராவது தங்களதுபடைகளில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களைஅழிக்க வேண்டும்.' இவ்வாறு ஹைபத்துல்லா அகுந்த்சாதா கூறியுள்ளார்.

மேலும் அந்தஅறிக்கையில், "எந்த தவறு நடந்தாலும், அதற்கு இந்த உலகத்திலும் சரி, மரணத்திற்குப் பிறகானவாழ்விலும் சரி மூத்தவர்களேபொறுப்பேற்பவர்கள்" எனவும் ஹைபத்துல்லா அகுந்த்சாதா அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Haibatullah Akhundzada taliban
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe