லண்டனில் உள்ள வார்விர் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றுபவர் லாரா ஸ்மித். இவர் அங்கு செவிலியராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். இவர் வழக்கம்போல் நேற்று பணியினை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் பயணம் செய்த காரில் முன்னே சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து ஐஸ் கட்டிகள் பறந்து அவரின் கார் கண்ணாடியில் விழுந்துள்ளது.

Advertisment

அதிவேகத்தில் சென்ற நிலையில் ஐஸ் கட்டிகள் விழுந்ததால் காரின் கண்ணாடி உடைந்து நொறுக்கியுள்ளது. மேலும் இதனால் நிலைதடுமாறிய அவர், அருகில் இருந்த மரத்தின் மீது காரை மோதியுள்ளார். இதில் கடுமையான காயத்துடன் மீட்டகப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீட் பெல்ட் போட்டிருந்ததால் பெரிய அசம்பாவிதம் நடைபெறுவதில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் காரில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.