உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது.

Advertisment

icc world cup 2019 semi final 2 England win

அதன் பின் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை இறுதிச்சுற்று போட்டி வரும் ஞாயிற்றுகிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இது வரை ஒரு முறை கூட உலகக்கோப்பையை கைப்பற்றதா அணிகள் இறுதி சுற்றுக்கு தகுதி. இது வரை நடந்த 9 உலகக்கோப்பை தொடரில் 8 தொடரில் அரையிறுதிக்கு சென்ற ஒரே அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா அணி பெற்றுள்ளது.