கடந்த 100 ஆண்டுகால தொழில்நுட்ப உலகில் மாபெரும் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது ஐ.பி.எம் நிறுவனம். உலகம் முழுவதும் பல நாடுகளில் தொழில் நடத்தி வரும் இந்நிறுவனம் வயது மூப்பின் காரணமாக தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருவதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

ibm sacked one lakh employees to look cool and trendy

ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இணையாக புதுமையாகவும், நாகரீகமாகவும்மாற்றும் பொருட்டு 40 வயதை கடந்த 1 லட்சம் பணியாளர்களை கடந்த 5 ஆண்டுகளில் ஐபிஎம் நிறுவனம் பணியை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐபிஎம் நிறுவனம் இந்த குற்றசாட்டை முற்றிலும் மறுத்த நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்று இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தரவுகளை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் தனது மொத்த பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை நீக்கியுள்ள இந்நிறுவனம், அதை ஈடுசெய்ய அதிரடி ஆள்சேர்ப்புப் பணியும் செய்துவருவதாக முன்னாள் பணியாளர்கள் ஐபிஎம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

Advertisment

புதுமையாகவும், நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 40 வயது ஆனவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது பலரையும் ஆச்சர்யமாக பார்க்க வைத்துள்ளது.