Skip to main content

ஐபிஎம் (IBM), ரெட் ஹேட் (Red Hat) வரலாற்றின் மூன்றாவது மாபெரும் கையகப்படுத்தல்...!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018

ஐபிஎம் (IBM) நிறுவனம், ரெட் ஹேட் (Red Hat) எனும் மென்பொருள் நிறுவனத்தை 34 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்போவதாக நேற்று அறிவித்துள்ளது. இவ்வளவு  பெரியத் தொகையைக் கொடுத்து ஒரு நிறுவனம் மற்றோரு நிறுவனத்தை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. நிறுவன வர்த்தக வரலாற்றில் மூனறாவது மாபெரும் கையகப்படுத்துதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ii

 

 

இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டு டெல் நிறுவனம் ஈஎம்சி எனும் நிறுவனத்தை 67 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், 2000-ஆம் ஆண்டு ஜேடிஎஸ் நிறுவனம் எஸ்டிஎல் நிறுவனத்தை 41 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் வாங்கியது. இப்போது 2018-ல் ஐபிஎம் நிறுவனம் ரெட் ஹேட் நிறுவனத்தை 34 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குகிறது. ரெட் ஹேட் நிறுவனத்தின் பங்குகளை தலா 190 அமெரிக்கா டாலரைக் கொடுத்து ஐபிஎம் வாங்குகிறது. 

சார்ந்த செய்திகள்