Published on 16/07/2022 | Edited on 16/07/2022

எரிபொருளை நிரப்ப இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சமிகா கருணாரத்ன கூறினார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால் கிரிக்கெட் பயிற்சிக்கு கூட போக முடியவில்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சமிகா கருணாரத்ன தெரிவித்தார்.
இரண்டு நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது காரில் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும், இலங்கை ரூபாய் மதிப்பில் 10,000-க்கு பெட்ரோல் போட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.