sirisena

இலங்கையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவியை பறித்து அந்த இடத்தில் மஹிந்த ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து பல்வேறு அரசியல் குழபத்தில் சிக்கித் தவிக்கிறது இலங்கை.

Advertisment

இந்நிலையில் சர்வதேச ஊடக நிறுவனங்களின் சந்திப்பில் இலங்கை அதிபர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமர் பதவியில் அமர்த்தப்படுபவர் அதிபருடன் இணைந்து செயல்படக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து செயற்பட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேறு ஒருவரை அழைத்துவர முடியும்” என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், பாரிய ஊழல் மோசடியில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு தொடர்புள்ளது. அது குறித்து ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிறிசேனா தெரிவித்துள்ளார்.