யோகாவிற்கு பயன்படுத்தும் பந்தை வைத்து மனைவி மற்றும் மகளைகொலை ஆண் செய்த சம்பவம் பல்வேறு விசாரணைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஹாங்காங் நகரில் கடந்த2005-ஆண்டு காரில் ஒரு பெண்ணும் அவரது மகளும்மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது ஆனால் எந்த தடயங்களும் கிடைக்காததால்எந்த விதமுன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் அண்மையில் அவர்கள் அதிக நேரம் கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் இறந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துருப்பை பயன்படுத்தி போலீசார் நடத்திய ஆய்வில்அவர்கள் இறந்து கிடந்த காரில் யோகாவிற்கு பயன்படுத்தப்படும் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/img_20140416_111806_005.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதனை அடுத்து தொடர்ந்த விசாரணையில் அந்த பெண்ணின் கணவர்ஹா கிம்-சன் தான் கொலை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹாங்காங்கில் மயக்கவியல் நிபுணராக உள்ள அவர் இந்த கொலை நடப்பதற்கு முன் யோகாபந்துகளை தான் பணியாற்றியஆய்வகத்திற்கு எடுத்து சென்று கார்பன்மோனாக்ஸைடு காற்றை நிரப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி அங்கு வேலை செய்தவர்களிடம் போலீசார் விசாரித்ததில் வீட்டில் எலி தொல்லையை கட்டுப்படுத்த கார்பன் மோனாக்சைடு தேவை என்று கூறியதாக தெரிவித்துள்ளது.
அவருக்கு வேறுஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட கள்ள உறவை மனைவி கண்டித்ததால் அவரை கொல்ல திட்டமிட்ட ஹா அவர் காரில், தான் யோகாபந்தில்நிரப்பிவந்த கார்பன் மோனோசைட்டை திறந்து விட்டு கார் கதவுகளை பூட்டியுள்ளார். அந்த காற்றை சுவாசித்த அவரது மனைவி இறந்துள்ளார். அதில் மற்றோரு பரிதாபம் அவரது மகளும் அந்த காற்றை சுவாசித்துகாரில் இறந்துள்ளார் என்பதுதான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)