
கணவருக்காக தடபுடலாக பிறந்தநாள் ஏற்பாட்டை மனைவி மேற்கொண்ட நிலையில் அதனைக் கணவன் பாராட்டாததால் மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மிச்சல் ஓய் பீட்டர்ஸ் என்ற பெண் தன்னுடைய கணவனின் ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் மனைவியின் பிறந்தநாள் ஏற்பாடுகளை கணவன் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து பிறந்தநாள் அன்று பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானம் ஒன்றை அருந்திய போது கணவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் கணவனின் தொண்டை பகுதியில் புண் ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் சோதனை செய்தபோது சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை மனைவி குளிர்பானத்தில் கலக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மனைவி மிச்சல் ஓய் பீட்டர்ஸை போலீசார் விசாரித்துள்ளனர். அதில் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை கணவன் பாராட்டதால் ஆத்திரத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்ததை மனைவி ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.