பாகிஸ்தானில் ஜூலை 25 பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் கட்சிதேர்தல் பரப்புரையின் போது தீவிரவாத அமைப்புகளால் வெடிக்க செய்யப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 128 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

bomb

bomb

பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுகிஸ்தானில் அவாமி கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு கூட்டத்தில் புகுந்த மனித வெடிகுண்டு வெடித்து 70 பேர் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில்54 பேர் தொடர்ந்து பலியாகி பலி எண்ணிக்கை 124 ஆக இருந்தது.

Advertisment

அதேபோல் பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியிலுள்ள பன்னு என்ற இடத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மனித வெடிக்குண்டு தாக்குதலுக்கு சிலபயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது