சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. மேலும் ஹூவாய் நிறுவனம் மீது அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதற்கிடையில் ஹவாய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வேன்ஜூ மெங் (Wanzhou meng) ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி செயல்பட்டார் என்றும் மற்றும் மோசமான வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார் என்றும் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய டிரம்ப் நிர்வாகம் அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடைபோட்டது.
இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்தது தொடர்பாக அமெரிக்க அரசு மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.