Advertisment

ஐ.பி.எல் கொண்டாட்டமாக ஹாட்ஸ்டார் அறிவித்த அதிரடி சலுகை!!!

hotstar

ஐபிஎல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹாட்ஸ்டார் நிறுவனம், புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

Advertisment

ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை தன்னுடைய செயலி மூலம் நேரலையாக ஒளிபரப்பும் உரிமையைக் கொண்டுள்ளது. இன்று 13-வ து ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்க இருக்கிறது. சென்னை மற்றும் மும்பை அணிகள் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஐபிஎல் தொடரைக் கொண்டாடும் விதமாக புதிய வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அதிரடியான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

Advertisment

அதன்படி, புதிய பயனாளர் ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையை செலுத்தும்போது, கூடுதலாக ஒரு மாத காலம் இலவசமாக பயன்படுத்தும் உரிமையை அளித்துள்ளது. வழக்கமாக ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையை செலுத்தும்போது, 12 மாத காலம் மட்டுமே பயன்படுத்த முடியும். புதிய வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் கவர்ந்திழுக்கும் விதமாக வெளியிட்டுள்ள இந்தசலுகையானது இந்த வாரத்தின் இறுதி நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையானது இந்திய மதிப்பில் 399 ரூபாய் ஆகும்.

hotstar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe